Tuesday, March 31, 2015

கொம்பனுக்கு ஆதரவாக திரள்கிறது திரையுலகம்



ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்த 'கொம்பன்' படத்தை தடைசெய்யக்கோரி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எழுப்பிய சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டி இருக்கிறது. 

உயர்நீதமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணசாமி  சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்ட குழுவினருக்கு 'கொம்பன்' படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துக்களை பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி இன்று காலை நீதிபதிகள் அடங்கிய குழுவினருடன் கிருஷ்ணாசாமி தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் 'கொம்பன்' படத்தை காலை 7 மணிக்கு போட்டுக் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி நீதிபதிகள் வந்தும்கூட, கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் காலதாமதமாக படம் பார்க்க வந்ததோடு, 'கொம்பன்' படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தயாரிப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள்.  

அதற்கு நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றனர்.  பின்னர் ஒருவழியாக படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களில், படத்தை மறுபடியும் முதலிலிருந்து போட்டுக் காண்பிக்கும்படி கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சனை செய்ய, நீதிபதிகளுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். 

ஒரு கட்டத்தில் தியேட்டரை நீதிபதிகள் தியேட்டரைவிட்டே சென்றுவிட்டனர். நடந்த விஷயங்களை சென்னை நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்போவதாகக் கூறி கிளம்பிவிட்டார்களாம். 

நீதிபதிகள் தரும் அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மதுரை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் இன்று மாலை 4 மணிக்கு 'கொம்பன்' பட வழக்கில் தீர்ப்பு வெளிவரும் என்று தெரிகிறது. 

இதுஒருபுறமிருக்க 'கொம்பன்' படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.'கொம்பனு'க்கு ஆதரவாக #SUPPORTKOMBAN என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவை தெரிவித்த வண்ணமுள்ளனர். 

ரசிகர்களும் இந்த ஹேஷ்டேக் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இப்பிரச்சனையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டு கொம்பன் படத்துக்கு தன் ஆதரவை தெரிவிக்க உள்ளது. இதுகுறித்து இன்று மாலை சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச உள்ளனர்.

Sunday, March 29, 2015

காமெடியனை கைவிட்ட விஜய்

பேரரசு இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடித்த படம் திருப்பாச்சி. இந்த படத்தில் விஜய்யின் நண்பனாக காமெடி ரோலில் நடித்திருந்தவர் பெஞ்சமின். 

அதற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தபோதும் திருப்பாச்சி படத்தில் படம் முழுக்க விஜய்யுடன் நடிக்கும் காட்சியில் நடித்ததால் அடுத்து இவர் பெரிய காமெடியனாகும் நிலை இருந்தது.

ஆனால், பின்னர் அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களே கிடைக்கவில்லை. அதனால் சில சின்ன படங்களில் நடித்த பெஞ்சமின் மார்க்கெட்டில் இருந்தே காணாமல் போய் விட்டார். 

அதையடுத்து, விஜய்யை சந்தித்தும் தனக்கு சான்ஸ் தருமாறு கேட்டாராம். ஆனால், அவரோ, நான் நடிக்கும் படங்களில் யார் யார் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே டைரக்டர்கள்தான். 

நான் அதில் தலையிடுவதே இல்லை. அதனால் என்னை வைத்து படமெடுக்கும் டைரக்டர்களை சந்தித்து நீங்களே கேளுங்கள். கதைக்கு ஓகே என்றால் அவர்கள் சான்ஸ் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டாராம்.

அதையடுத்து, பெஞ்சமின் விஜய் நடித்த படங்களில் நடிக்க முயற்சி எடுத்திருக்கிறார் ஆனால் யாரும் கைகொடுக்கவில்லையாம். அதனால் இப்போதும் சில சிறிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பெஞ்சமின், ஓஹோ என்றொரு படத்தில் தனி காமெடியனாக நடித்துள்ளார். 

தன்னை கோலிவுட் டைரக்டர்கள் திரும்பிப்பார்க்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான காமெடி சீன்களை யோசித்து நடித்துள்ளாராம். அதனால் இந்த ஓஹோ படத்திற்கு பிறகு எனது நடிப்பையும் ஆஹா ஓஹோ என்று பேசுவார்கள் என்று கூறி வருகிறார் பெஞ்சமின். 

Wednesday, March 25, 2015

ரஜினியின் அடுத்த படம் காமெடி படம்

சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என ஆக்சன், சீரியஸ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்த ரஜினி, விரைவில் முழுநீள காமெடி படம் ஒன்றி்ல் நடிக்க உள்ளார்.

ரஜினி நடித்த காமெடி படங்களான தில்லுமுல்லு, குரு சிஷ்யன் படங்கள் வசூலிலும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் பெற்றன. 

இந்நிலையில், மீண்டும், காமெடி படம் ஒன்றில் ரஜினி நடிக்க உள்ளார். இதுதொடர்பாக, கிரேசி மோகனை, சில நாட்களுக்கு முன் ரஜினி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்தின் திரைக்கதையை, கிரேசிமோகன் தான் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 24, 2015

மொட்டை தலைக்கு புது மவுசு

மில்க் இயக்குனரால் ஐ காட் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட மொட்டை தலை நடிகர் காட்டில் இப்போது அடை மழை. 

அவரை ஹீரோவாக நடிக்க கேட்டு நான்கு கம்பெனிகள் வரிசையில் இருக்கிறது. "நமக்கு இந்த ஹீரோல்லாம் சரிப்படாதுப்பா. எதுனாச்சும் சின்ன ரோலா கொடுங்க சின்ன சம்பளம் கொடுங்க போதும்பா" என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது ஆளே மாறிட்டாராம்.

தனி மானேஜர், கால்ஷீட் மானேஜர், செய்தி தொடர்பாளர், பி.ஏ. உதவியாளர் என அவரைச்சுற்றி ஒரு கூட்டமே உருவாகிவிட்டதாம். சம்பளம், கால்ஷீட் தேதியை அவர்களே தீர்மாணிக்குறாங்களாம். 

கதையும் அவர்கள்தான் கேட்கிறார்களாம். "அண்ணன் அம்புட்டு சிம்பிள். எவ்வளவு கஷ்டப்பட்டு வேணாலும் நடிப்பாரு, கொடுக்கிற சம்பளத்தை சந்தோஷமா வாங்கிக்குவாரு. 

இப்போ புதுசா வந்திருக்கிற ஜால்ரா கூட்டத்துக்கு நடுவுல கைதி மாதிரி இருக்காரு" என்று புலம்புகிறார்கள். அவருக்கு நெருக்கமானவர்கள்.

Wednesday, March 18, 2015

போலீஸ் ரோல் - ஜிம்முக்கு செல்லும் விஜய்சேதுபதி



ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்பதை பெரும்பாலான ஹீரோக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த விஷயத்தில் விஜய்சேதுபதி விதிவிலக்கு. 

நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய்சேதுபதி. எனவே நண்பர்கள் தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தால் அதை தட்டமுடியாமல் கால்ஷீட் கொடுத்துவிடுகிறார். இதன் காரணமாக, நிறைய படங்களில் நடிக்கும் நடிகராக மாறிவிட்டார் விஜய்சேதுபதி. 

தற்போது இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய், மெல்லிசை, நானும் ரௌடிதான், இறைவி, கைநீளம் ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இவை தவிர புஷ்கர் காயத்ரி, கோகுல் இயக்கத்தில் நடிக்கவும் தலையாட்டி இருக்கிறார். 

இவற்றோடு பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநரான அருண்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்சேதுபதி. 

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டராம் விஜய்சேதுபதிக்கு. தற்போது கொஞ்சம் தொப்பையுடன் காணப்படும் விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதால் தினமும் ஜிம்முக்கு சென்று தீவிரமாக வொர்க்அவுட் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

Tuesday, March 17, 2015

தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”.

சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், “பாபநாசம்” (த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய “ஒரு மழகாலத்” என்னும் நாவலில் உள்ள கதையை ஒற்றிருக்கிறது என்றும், த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் திரைப்படமாக்கிவிட்டதாகவும் எனவே பாபநாசம் படபிடிப்பை நிறுத்த கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பாபநாசம் படப்பிடிப்பிற்க்கு இடைக்கால தடை பெற்றிருந்தார். அந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்த தயாரிப்பாளர் தரப்பு, தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர்.

இந்நிலையில் எர்ணாகுலம் 2வது கூடதல் நீதிமன்ற அமர்விர்க்கு வந்த இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடி செய்து தயாரிப்பாளருக்கு ஆதரவான தீர்ப்பினை அளித்துள்ளார்.
இதனால் பாபநாசம் படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது.

Monday, March 16, 2015

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஆர்யா

இயக்குநர் விஜய்யை பெரிய அளவில் பேச வைத்த படம் ''மதராசப்பட்டினம்''. ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான இப்படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

மேலும் பழைய சென்னையை நம் கண்முன் நிறுத்தியது.  எமிக்கும் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. 

இந்நிலையில் மதராசப்பட்டினம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆர்யாவும், இயக்குநர் விஜய்யும் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக தகவல் வௌியாகியுள்ளது. 

தற்போது விஜய், விக்ரம் பிரபுவை வைத்து, ''இது என்ன மாயம்'' படத்தை இயக்கி வருகிறார். 

அதேப்போல் ஆர்யாவும், புறம்போக்கு, யட்சன்,  மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சுவங்க படங்களில் பிஸியாக இருக்கிறார். இருவரும் அவர்களது படங்களை முடித்த பின்னர் இந்த புதிய படத்தில் இணைவார்கள் என தெரிகிறது. 

Wednesday, March 11, 2015

ரஜினி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய கோரி வழக்கு

ரஜினிகாந்த் நடிப்பில், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரது நடிப்பில், கடந்த டிசம்பர் 12ம் தேதி வௌியான படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 

இப்படம் ரிலீஸால் கடந்த சில மாதங்களாக பிரச்னைகள் நிலவி வருகிறது. குறிப்பாக இப்படத்தால் தங்களுக்கு ரூ.31 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இப்பிரச்னை தொடர்பாக உண்ணாவிரத போராட்டங்கள் எல்லாம் நடந்தது. இதற்கிடையே லிங்கா படம் தொடர்பாக தன்னையும், ரஜினிகாந்தையும் விமர்சிக்க கூடாது என்று கூறி கர்நாடக கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார் ராக்லைன் வெங்கடேஷ்.

இந்நிலையில், லிங்கா படத்திற்கு கேளிக்கை வரி பெற்றது தொடர்பாக அரசுக்கு ரூ.21 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ரஜினி மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சிங்கார வடிவேலன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கை நாளைக்கு(மார்ச் 12ம் தேதி) ஒத்தி வைத்தார். 

Monday, March 9, 2015

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ளே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

நேபாளில் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டி இருப்பதால் இந்த மாதம் செல்கின்றனர். அதோடு 10 எண்றதுக்குள்ளே படப்பிடிப்பு ஓவர்.

இப்படத்தை அடுத்து விக்ரம் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒரு படம்... கௌதம் மேனன் இயக்கும் படம். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் கௌதம் மேனன். இப்படத்தில் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது. எனவே படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்திவிட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் கௌதம்மேனன்.

அப்ப சிம்புவை வைத்து இயக்கி வந்த அச்சம் என்பது மடமையடா படம்? சிம்புவுக்கே வெளிச்சம்

Saturday, March 7, 2015

சந்தானத்தை பழிவாங்கிய ஆர்யா

ஆர்யாவுக்கும், சந்தானத்துக்கும் உள்ள நட்பு திரைக்கு அப்பாலும் மிக உறுதியானது என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும், சமீபத்தில் பாண்டிசேரியில் நடந்த  ஒரு சம்பவம் அதை உறுதிபடுத்தியது. 

சந்தானம் மற்றும் ஆஷ்னா சவேரி இணையாக நடிக்கும் இனிமே இப்படிதான் படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது. அருகிலேயே ஆர்யா யட்சன் படப்பிடிப்புக்காக வந்து இருந்தார்.

அவருக்கு சந்தானம் அருகில் இருப்பது தெரிந்ததும் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல முடிவெடுத்தார். அது ஒரு சம்பிரதாயத்துக்கு வரும் வருகை அல்ல என சந்தானத்துக்கு தெரிய வாய்ப்பில்லை. 

சந்தானம் சமீபகாலமாக தனக்கு ஈடுபாடு அதிகமுள்ள நடன காட்சியில் மும்முரமாக ஈடுப்பட்டு வந்தார். அந்த நேரம் அங்கு ஆர்யா வந்தாரே  பார்க்கலாம், ஒரே களேபரம் தான். 

டான்ஸ் மாஸ்டர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆர்யா, சந்தானத்திடம்  இன்னும் நல்லா நடனம் ஆட வேண்டும் என நிர்பந்தித்து கொண்டே இருந்தார். 

நண்பர் அக்கறையில்  தானே  சொல்கிறார் என மீண்டும் மீண்டும்  ஆடிய சந்தானத்துக்கு, தனது சக்தி மொத்தமும் இழந்து  சோர்வு  அடைந்த பின்னர் தான் ஆர்யா வேண்டுமென்றே அவ்வாறு செய்வதை உணர்ந்துக் கொண்டார். 

திரையில் தான் ஆர்யாவுக்கு செய்ததை ஒரு பழி வாங்கும் முயற்சியாக ஆர்யா தன்னிடம் இப்போது செய்வதை தெரிந்துக் கொண்டு சந்தானம், ஆர்யாவிடம் ஐயா சாமி போதும் உங்க விளையாட்டு எனக்கூறி தப்பித்தார். 

Wednesday, March 4, 2015

பாலிவுட்டிலும் மங்காத்தா கேம்

வெங்கட்பிரபு இயக்கத்தில், தல அஜித் நடித்த மங்காத்தா படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. 

அஜித் நடிப்பில், ஆரம்பம் படம், பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், மங்காத்தா படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. 

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், இந்த ரீமேக் பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மங்காத்தா ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பவர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அர்ஜூன் மற்றும் த்ரிஷா, முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Monday, March 2, 2015

40 கோடிக்கு பிசினஸ் ஆன ரஜினி முருகன் படம்

இதுவரை நடித்த ஆறு படங்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்த சிவகார்த்திகேயனின் ஏழாவது படமாக வெளியானது - காக்கி சட்டை. 

உலகமெங்கும் 700க்கும் அதிகமான திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 370 திரையரங்குகளுக்கும் மேலாகவும் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதுவரை காமெடியை மட்டுமே நம்பிய சிவகார்த்திகேயன், காக்கி சட்டை படத்தில் டான்ஸ், ஃபைட், காமெடி என கலந்து கட்டி நடித்திருந்தார். 

சுருக்கமாக சொல்வது என்றால், தன்னால் முடிந்தளவுக்கு இப்படத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனாலும் அவரின் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லை என்ற கருத்தே பரவலாக உள்ளது.

இதுவரை நடித்த ஆறு படங்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்த சிவகார்த்திகேயனின் ஏழாவது படமாக வெளியானது - காக்கி சட்டை. 

உலகமெங்கும் 700க்கும் அதிகமான திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 370 திரையரங்குகளுக்கும் மேலாகவும் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதுவரை காமெடியை மட்டுமே நம்பிய சிவகார்த்திகேயன், காக்கி சட்டை படத்தில் டான்ஸ், ஃபைட், காமெடி என கலந்து கட்டி நடித்திருந்தார். சுருக்கமாக சொல்வது என்றால், தன்னால் முடிந்தளவுக்கு இப்படத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனாலும் அவரின் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லை என்ற கருத்தே பரவலாக உள்ளது.

அது சரி...இப்படம் ரசிகர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? பாக்ஸ் ஆபிஸைப் பொறுத்தவரை இப்படம் ஏமாற்றம் அளித்திருப்பதாகவே தகவல்கள் அடிபடுகின்றன.  

உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் தேர்வு போன்ற காரணங்களால் இப்படம் வெளியான முதல்நாளிலேயே பல தியேட்டர்கள் ஃபுல்லாகவில்லை என்று கேள்வி. முதல்நாளில் தமிழகமெங்கும் 4 கோடிக்கும் குறைவாகவும், உலக அளவில் 7 கோடிக்கும் குறைவாகவும்தான் காக்கி சட்டை படம் வசூல் செய்திருக்கிறதாம்.

இந்த தகவல் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தை வாங்க அட்வான்ஸ் கொடுத்திருப்பவர்களின் வயிற்றைக் கலக்கி இருக்கிறது. காரணம்... ரஜினி முருகன் படம் 40 கோடிக்கு பிசினஸ் ஆகி உள்ளது.

Sunday, March 1, 2015

காமெடி நடிகரின் கேரக்டரை மாற்றிய தேசியவிருது

மலையாள சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி  என ஒருவர் விடாமல் அவர்களைப்போலவே அதுவும் அவர்கள் முன்னிலையிலேயே மிமிக்ரி செய்து காண்பிக்கும் தைரியமான திறமைசாலி ஒருத்தர் இருக்கிறார். 

அவர் தான் மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூட். 2005ல் மம்முட்டி நடித்த  'ராஜமாணிக்கம்'' படத்தில் அவருக்கு திருவனந்தபுரம் பாஷையை சொல்லிக்கொடுப்பதற்காக மலையாள சினிமாவில் கால்பதித்தவர் தான் இந்த சுராஜ் வெஞ்சாரமூட்.  

'பேரறியாதவர்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, கடந்த 2013க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். 

ஆனால் அதன்பின்னர் அவரது போக்கிலும் அதாவது நடிப்பிலும் கொஞ்சம் மாற்றம் ஏற்படவே செய்திருக்கிறது. காமெடி வேடங்களை குறைத்து கேரக்டர் ரோல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். 

'கர்ப்பஸ்ரீமன்', 'காட் பார் சேல்' ஆகிய படங்களை பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். இப்போது மீண்டும் 'எண்டே சத்யநேஸ்வன பரீட்சைகள்' என்கிற படத்தில் அறுபது வயது பெரியவராக கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் திருவனந்தபுரம் கோர்ட்டில் கிளார்க் வேலைபார்ப்பவராக நடித்திருக்கிறார். 

நான்ஸ்டாப் காமெடிக்கு சொந்தக்காரரான சுராஜ் இப்படி குணச்சித்திர பாதையில் இறங்கியது காமெடி ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான். அவர்களுக்கு ஆறுதலாக சில காமெடி படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார் சுராஜ்.