Friday, February 27, 2015

காக்கி சட்டை - சினிமா விமர்சனம்

மான் கராத்தே படத்தில் மல்லாக்க விழுந்ததற்கு அப்புறம் சிவகார்த்திகேயன் சிக்ஸர் அடிக்க முயன்றிருக்கும் திரைப்படம், கமல் நடித்த காக்கிசட்டை டைட்டிலேயே கொண்டு வௌிவந்திருக்கும் திரைப்படம்., 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் படம், எதிர்நீச்சல் வெற்றிப்பட இயக்குநர் உள்ளிட்ட டீம் மீண்டும் இணைந்திருக்கும் படம், 

எல்லாவற்றுக்கும் மேலாக இப்பட தயாரிப்பாளர் நடிகர் தனுஷே, இப்படத்திற்கு எதிர்ப்பு என வதந்தியை கிளப்பிய படம்... என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் காக்கி சட்டை.

கமலின், காக்கி சட்டைக்கும், கார்த்திகேயனின் காக்கி சட்டைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அதில், கமலின் அப்பா போலீஸ், இதிலும் சிவகார்த்திகேயனின் அப்பா போலீஸ்... 

பழைய காக்கிசட்டையில், கமல் எல்லா தகுதிகள் இருந்தும் போலீஸ் வேலை கிடைக்காமல் போலீஸ் போன்று செயல்பட்டு, சமூக விரோதிகளை களையெடுப்பார். 

இதில் கான்ஸ்டபிளாக காக்கி சட்டை மாட்டிக்கொண்ட(பல சீன்களில் ரகசிய போலீசாக கலர் சட்டையிலேயே...) சிவகார்த்திகேயன், பெரிய போலீஸ் ஆபிஸராக வரும் ஆசையில், இன்டர்நேஷனல் லெவல் உடல் உறுப்பு திருட்டு கூட்டத்தை அடையாளம் கண்டு, அந்த கூட்டத்தை கூண்டோடு கைலாசம் அனுப்பி, தான் நினைத்த மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவதும், அதற்கு கதாநாயகி ஸ்ரீதிவ்யா எவ்வாறு உதவுகிறார்.?, 

போலீஸ் வேலை என்றால் வேண்டாம் என சொல்லும் ஸ்ரீதிவ்யா குடும்பம், அதன்பின் எப்படி சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யாவின் காதலுக்கு சம்மதம் தருகிறது...? என்பதும் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை கலந்து கட்டி காக்கி சட்டை-யை கலர்புல் சட்டையாக தந்திருக்கிறார்கள்! லாஜிக் பார்க்காமல் போனால் கான்ஸ்டபிள் சிவகார்த்திகேயன் செய்யும் கமர்ஷியல் மேஜிக்குகளை ரசித்துவிட்டு திரும்பலாம். 

சிவகார்த்திகேயன்-மதிமாறனாக கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் கான்ஸ்டபிளாக இருந்து கொண்டு செய்யும் காரியங்கள், போலீஸ் கமிஷனர் லெவலுக்கு இருப்பது தான் நம்ப முடியாததாக இருக்கிறது. ஆனாலும் முன்பாதியில் சிவா, ஸ்ரீதிவ்யாவின் காதலுக்காக தான் போலீஸே இல்லை... என்று என்பது உள்ளிட்ட காதல் கலாட்டாக்கள் சுவாரஸ்யம். 

வில்லனிடம் சிவகார்த்திகேயன், ஒருத்தன், பெற்ற அம்மா-அப்பா, நல்ல நண்பன், நேர்மையான போலீஸ் அதிகாரி உள்ளிட்டவர்களை பணத்தால் வாங்க முடியாது... என பேசும் பன்ச் டயலாக்குகள் ஆகட்டும், இன்னும் பல காமெடி பஞ்ச்கள் ஆகட்டும் அனைத்திலும் சிவகார்த்தி, மிடுக்காகவும், துடுக்காகவும் மிளிர்கிறார். ஸ்ரீதிவ்யாவை காபந்து செய்ய வில்லன்களுடன் மோதும் பைக் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.

ஸ்ரீதிவ்யா, எங்க வீட்டுக்குத்தான் உங்க போலீஸ் வேலை பிடிக்கல, எனக்கு பிடிக்கலேன்னு சொன்னேனா...?! என பேசும் காதல் மொழிகள், சிவகார்த்திகேயனை மட்டுமல்ல ரசிகர்களின் இதயங்களிலும் லவ் பல்ஸை எகிற வைக்கிறது. 

பாடல் காட்சிகளில், ஸ்ரீதிவ்யா-சிவகார்த்திகேயனின் நெருக்கம், இவர்களது முந்தைய படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை காட்டிலும் கூடுதலாக இருப்பது வலு சேர்த்திருக்கிறது. அதில்(வ.வ.சங்கம்) படத்தில் பொறுக்கியாக இருந்து ஸ்ரீதிவ்யாவை டாவடித்த சிவகார்த்தி, இதில் போலீஸாக சட்டத்தை, தன் சட்டை பாக்கெட்டிற்குள் வைத்திருப்பதால் நெருக்கம் சற்றே கூடுதலாக்கும்.!

போலீஸ் இன்ஸ்ஸாக வந்து பாதியிலே உயிரை விடும் வரும் பிரபு, தன் கொடூர செய்கைகளால் விரட்டி விரட்டி மிரட்டும் ஆள்கடத்தல் பேர்வழி வில்லன் துரை, சம்பத்ராம், மயில்சாமி, சிவகார்த்திகேயனின் யதார்த்த அம்மாவாக வரும் கல்பனா, விஜய் ராய், திலீப், ரயில் ரவி, ஈ.ராம்தாஸ்... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மாமா மனோபாலாவின் எபிசோடு, அவரது எம்.எல்.ஏ. ஆசை மாதிரியே படத்திற்கு இன்னும் நீளம் வேண்டி சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தேவைதானா.?!

பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், தங்கள் பட நாயகர்களுக்கு ஒரிஜினல் பெயரை சூட்டி அழகு பார்ப்பார்கள், ஆனால் இப்பட இயக்குநர் ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார், கொடூர வில்லனுக்கு துரை என பெயர் சூட்டியிருப்பது ஏனோ.?

அனிருத்தின் இசையில், பாடல்கள் ஒவ்வொன்றும் புது ர(ரா)கம். எம்.சுகுமாரின் ஔிப்பதிவில் உள்நாட்டு லோகேஷன்களும், அயல்நாட்டு லோகேஷன்களும் அழகு ஓவியமாக தெரிகிறது. பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், காக்கி சட்டைக்கு கவசமாக இருக்கிறது. 

துரைசெந்தில் குமாரின் இயக்கத்தில், ஒரு கான்ஸ்டபிளால் சில இடங்களில், கமிஷனரையும் தாண்டி இத்தனையும் செய்ய முடியுமா...? என லாஜிக் பார்க்காமல் காக்கி சட்டையை பார்த்துவிட்டு வந்தால் காக்கி சட்டை - கமர்ஷியல் சட்டை!

Wednesday, February 25, 2015

சிம்புவுக்கு இனி மேலாவது மாற்றம் கிடைக்குமா?

சிம்பு கடைசியாக நாயகனாக நடித்த 'போடா போடி' படம் 2012ம் ஆண்டு வெளிவந்த்து. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்த மாதம் சிம்பு நீண்ட காலமாக நடித்து வந்த 'வாலு' படம் வெளியாக உள்ளது. 

அந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் வெளியாக உள்ளது. இந்தப் படங்கள் வெளிவருவதற்கு முன்பே சிம்பு அடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஆரம்பமாகி பின்னர் திடீரென நிறுத்தப்பட்ட படத்தை மீண்டும் தொடங்க உள்ளார்கள். இந்தப் படத்தில் சிம்புவும், பல்லவி சுபாஷும் நடிக்கிறார்கள். 

இந்தப் படத்தை கௌதம் மேனன் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு அஜித்திடம் இருந்து அழைப்பு வந்ததால் இந்தப் படத்தை அப்படியே போட்டுவிட்டு 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கப் போய்விட்டார். இப்போது இந்தப் படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்க உள்ளார்கள்.

இந்தப் படத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாக உள்ளதாம். 

நேற்று வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி முதல் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் சிம்பு இனிமேலாவது வெற்றிகரமான பாதை அமையுமா என்பதுதான் அவருடைய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதை சிம்பு புரிந்து கொண்டால் சரி... 

Monday, February 23, 2015

இயக்குரை நடிக்க விடாத நடிகர்

தானே இயக்கி நடிக்கும் ஆக்ஷன் கிங்கிற்கு மற்ற இயக்குனர்கள் நடிப்பது பிடிக்காதாம். "நடிக்கிறதுக்குதான் நாங்க இருக்கோம்ல அவுங்க அவுங்க வேலையை பார்க்க வேண்டும்" என்பாராம். 

சந்தன கடத்தல் வீரப்பன் கதையை படம் எடுத்த கன்னட இயக்குனர் தன்னோட புது படத்துக்கு ஆக்ஷன் கிங்கை புக் பண்ணினாராம். 

படத்தில் இயக்குனரும் நடிப்பதை கேள்விப்பட்ட ஆக்ஷன் கிங் "நீங்க நடிச்சா சரியா வராது. கவனம் சிதறும். வேறு நடிகைரை போடுங்க"ன்னு சொல்லிட்டாராம். அதனால நடிப்பு ஆசையை ஓரங்கட்டிட்டு 12பி  பஸ் பிடிச்சு சினிமாவுக்கு வந்த நடிகரை புக் பண்ணினாராம்.

Saturday, February 21, 2015

விஜய்சேதுபதி, சிம்ஹாவுடன் எஸ்.ஜே.சூர்யா இணையும் இறைவி

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்டின் அடுத்த படம் இறைவி. பீட்சா, ஜகிர்தண்டா படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். 

விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா மூவருமே ஹீரோவாக நடிக்கிறார்கள். கருணாகரன் காமெடியனாக நடிக்கிறார். இன்னும் ஹீரோயின்கள் முடிவாகவில்லை. 

கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராணயன் இசை அமைக்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. இதனை தயாரிப்பாளர் சி.வி.குமார் முறைப்படி அறிவித்துள்ளார்.

ஜிகிதர்தண்டா பாணியில் இதுவும் ஆக்ஷன் காமெடி படம். எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, சிம்ஹா மூவரும் தனித்தனி இடத்திலிருந்து தனித்தனி காரணங்களுக்காக ஒரே காரியத்தைச் செய்ய ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். 

அதன் பிறகு அவர்கள் ஒருவரை ஏமாற்றி மற்றவர் அதனை எப்படி சாதிக்க நினைக்கிறார்கள் என்கிற கதை என்பது பட வட்டாரத் தகவல்.

Thursday, February 19, 2015

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே - முடிவுக்கு வந்தது 1009 வார சகாப்தம்

உலக சினிமா வரலாற்றில் ''தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'' படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சந்தேகமே! 

இந்தப் படம் மும்பையில் தொடர்ந்து 1000 வாரங்களை கடந்து ஓடி வந்த நிலையில், இப்போது அந்தபடத்திற்கு குட்-பை சொல்லப்பட்டுள்ளது. ஆமாம் இப்படம் இன்றே கடைசியாக திரையிடப்பட்டது.

ஷாரூக்கான், கஜோல் நடிப்பில், 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியான படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே''. இப்படம் மும்பையில் உள்ள மராத்தா மந்தர் தியேட்டரில் ரிலீசானது. 

அப்போது முதல் தொடர்ந்து 19 ஆண்டுகளாக திரையிடபட்டு வந்த இப்படம், சமீபத்தில் ஆயிரமாவது வாரத்தை கடந்தது. இதை ஒரு விழாவாக எடுத்து கொண்டாடினர். இதில் ஷாரூக், கஜோல் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், இப்படத்திற்கான கூட்டம் குறைந்ததால் தொடர்ந்து இப்படத்தை திரையிட முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்னரே இப்படத்தின் காட்சிகள் நிறுத்தப்படும் என்று செய்திகள் வந்த நிலையில், இப்போது அந்த செய்தி உண்மையாகிவிட்டது. 

ஆமாம், இன்று காலை மட்டுமே 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'' படத்தின் கடைசி காட்சி என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதனால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரியக்காட்சியை 210 ரசிகர்கள் கண்டு களித்தனர். அதோடு இந்த காதல் காவிய சகாப்தம் முடிவுக்கு வந்தது.

''தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'' படத்தை தொடர்ந்து ஒரு காட்சியாக ரசிகர்கள் திரையில் கண்டுகளித்து வந்த நிலையில், இப்போது அது முடிவுக்கு வந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படம் ஒருவாரம் ஓடினாலே படம் வெற்றி பெற்று விட்டதாக விளம்பரப்படுத்தி விழா எடுத்து கொண்டாடும் இந்தக்காலத்தில், ஒரு படம் தொடர்ந்து 1009 வாரங்கள் ஓடி சாதனை படைத்துள்ளதை வெறும் சாதனை, வரலாற்று சாதனை என்று மட்டும் சொல்லிவிட முடியாது, விக்ரமின் 'ஐ' படத்தில் சொன்னது போன்று ''அதுக்கும் மேல...'' என்று சொன்னால் அது மிகையாது!!

Tuesday, February 10, 2015

ஐ - யின் தொடர் சாதனை

'ஐ' படம் பலத்த எதிர்பார்ப்பில் ஜனவரி மாதம் 14ம் தேதியன்று வெளியானது. வெளியான நாள் முதே இந்தப் படம் ஷங்கரின் முந்தைய படங்களைக் காட்டிலும் அதிகமான விமர்சனத்துக்குள்ளாகியது. 

அவருடைய மற்ற படங்களைப் போல் இந்தப் படம் இல்லை, இந்தப் படத்திற்கு முன்னர் வந்த படங்களில்தான் ஷங்கர் கடுமையாக உழைத்திருந்தார், 

இந்தப் படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை, விக்ரமின் நடிப்பைத் தவிர, என பல்வேறு தரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்தன. ஆனால், அப்படிப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் மீறி ஷங்கரின் முந்தைய படங்களைக் காட்டிலும் 'ஐ' படம் வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது.

நாம் முன்னரே தெரிவித்திருந்தபடி 'ஐ' படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தமிழ்த் திரையுலக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் தெலுங்கிலும் படம் 50 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டி லாபத்தைக் கொடுத்துள்ளது. ஆனாலும், இந்தப் படத்தை தொடர்ந்து தோல்விப் படம் என்றே தெலுங்கு மீடியாக்கள் எழுதி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 'ஐ' படம் திரையரங்குகள் மூலம் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாம். 

இன்னும் இந்தப் படம் உலகில் உள்ள சில மொழிகளில் வெளியாக உள்ளது, குறிப்பாக சீனாவில் அதிகத் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகிறது. 

மற்ற உரிமைகள், வெளிநாட்டு மொழிகளில் வியாபாரம்  என இந்தப் படத்தின் வியாபாரம் முழுவதும் முடிவடையும் போது 'எந்திரன்' படத்தின் மொத்த வியாபாரத்தையும் மிஞ்சி தமிழில் அதிக வசூலையும், வியாபாரத்தையும் புரிந்த படம் என முதலிடத்தில் வந்து நிற்கும் என்றும் சொல்கிறார்கள். 

இன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் இந்த மொத்த வியாபாரத் தொகை பற்றிய விவரம் முழுமையாகத் தெரிய வரும்.

Monday, February 9, 2015

விஜய்யின் 'புலி'யில் பவர்

கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ''புலி''. பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். 

விஜய் ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட இடைவௌிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், விரைவில் பாடல் காட்சிகளுக்காக விஜய் உள்ளிட்டவர்கள் வௌிநாடு பறக்க இருக்கின்றனர்.

கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ''புலி''. பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். விஜய் ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். 

நீண்ட இடைவௌிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், விரைவில் பாடல் காட்சிகளுக்காக விஜய் உள்ளிட்டவர்கள் வௌிநாடு பறக்க இருக்கின்றனர்.

சமீபத்தில், ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வௌியான ஐ படத்திலும் தனது வழக்கமான ஸ்டைலில் வந்து காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தார் சீனிவாசன். இப்போது அடுத்தப்படியாக விஜய் படத்திலும் தனது காமெடி சேட்டைகளை செய்ய இருக்கிறார்.

Wednesday, February 4, 2015

தாரை தப்பட்டை பாலாவுக்கு சவாலானது - இளையராஜா

பரதேசி படத்திற்கு பிறகு பாலா இயக்கும் படம் ''தாரை தப்பட்டை''. சசிகுமார், வரலெட்சுமி நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது, இவர் இசையமைக்கும் 1000-மாவது படமாகும். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் தஞ்சாவூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகவே நடந்து வருகிறது. இந்நிலையில், இளையராஜா படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்றுள்ளார். 

இளையராஜா வருவதை அறிந்த பாலா, அங்கு அவருக்கு படத்தின் டைட்டில் போன்றே தாரை தப்பட்டை முழங்க உற்சாகமான வரவேற்பு கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பு நடப்பதை பார்த்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, இந்தப்பக்கம் போகும் வழியில் இப்படத்தின் படப்பிடிப்பை பார்க்க வருமாறு பாலா கூறினார். 

அதன்படி நானும் வந்தேன். ஆனால் இப்படியொரு வரவேற்பு கொடுப்பார் என்று நினைக்கவில்லை. ரசிகர்களின் சந்தோஷம் தான் எனது சந்தோஷம். 

பாலா இதுவரை இயக்கிய படங்களை காட்டிலும், ''தாரை தப்பட்டை'' படம் அவருக்கு சவாலான படமாகத்தான் இருக்கும்.

Sunday, February 1, 2015

மார்ச்-1ல் உத்தமவில்லன் ஆடியோ ரிலீஸ்

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடிப்பில், வௌியாக இருக்கும் படம் ''உத்தம வில்லன்''. 

கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத், ஊர்வசி, நாசர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

இப்படம் இரண்டு விதமான காலக்கட்டத்தில் பயணிக்கிறது. கமல் கூத்து கலைஞராகவும், நடிகராகவும் நடித்துள்ளார். 

ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். 

இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடாக்ஷ்ன்ஸ் வேலைகள் எல்லாம் நடந்து வந்தது. விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட சில பணிகளுக்காக சமீபத்தில்,  கமல் அமெரிக்கா சென்று திரும்பினார். தற்போது டப்பிங் பணிகள் முழுமூச்சாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ''உத்தமவில்லன்'' படத்தின் ஆடியோவை மார்ச் 1ம் தேதி வௌியிட இருப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரும் என நம்பப்படுகிறது. 

இசை வௌியீட்டு விழாவை தொடர்ந்து மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரலில் படம் ரிலீஸாகும் என தெரிகிறது.