Tuesday, April 29, 2014

நயன்தாரா அடித்த நக்கல் பேச்சு நனவாகிறது

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு உடன் நயன்தாரா மறுபடி நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் என்ற செய்தி வந்தபோது முதலில் அதிர்ச்சியடைந்தது நயன்தாராவின் நட்பு வட்டாரம்தான். 

வேலியில் போன ஓணானை மீண்டும் எடுத்து வேட்டியில் போட்டு கொள்கிறாரே... என்று கவலைப்பட்டதோடு, இது பற்றி நயன்தாராவிடமே கேட்க...

சிம்பு கூட மறுபடி நடிக்கிறதால மீண்டும் எங்களுக்குள் லவ் வரும்னு நினைக்காதே. அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை! எனக்கு சிம்புவும் ஒண்ணுதான்...! சிவகார்த்திகேயனும் ஒண்ணுதான்..! என்று அப்போது செம நக்கலாக பதில் சொன்னாராம் நயன்தாரா. 

நயன்தாரா சொன்ன இந்த நக்கல் பதில், அப்படியே வெளியே பரவி...கடைசியில் சிம்புவின் காதுக்கே போய்விட்டது. 

என்னை சிவகார்த்திகேயனுடன் கம்பேர் பண்ணிட்டாளே..! என்று அப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருக்கிறார் சிம்பு. ஆனாலும் தன் வருத்தத்தை நயன்தாராவிடம் காட்டிக்கொள்ளவில்லை.

இந்நிலையில், அன்று நயன்தாரா அடித்த கமெண்ட் விரைவில் நனவாக இருக்கிறது. யெஸ்..சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தான் நடிக்க விரும்புவதாக நயன்தாராவே ஒரு பிரபல இயக்குநரிடம் வாய் திறந்து சொல்லி இருக்கிறார். 

அவர் அப்படி சொன்னதை அடுத்து, படு வேகமாக ஒரு ப்ராஜக்ட் தயாராகி வருகிறது. 

இந்த விஷயம் எல்லாம் சிம்புவுக்குத் தெரிய வந்ததால்தான் இது நம்ம ஆளு படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேறு படத்துக்குப் போய்விட்டாராம்.

Monday, April 28, 2014

ரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா

கோச்சடையான் படத்திற்கு பிறகு, ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராணா என்ற படத்தில் கமிட்டானார் ரஜினி. 

இப்படத்தின் பூஜை நடைபெற்ற அன்றே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால் அப்படம் கைவிடப்பட்டது. 

மாறாக அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில், கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தில் நடித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் தற்போது ரிலீஸ் தேதியை(மே 9ம் தேதி) நெருங்கிவிட்டது.

இந்நிலையில் கோச்சடையான் படத்திற்கு ரஜினி, கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் ஆகிய மூவரில் ஒருவரது படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. 

ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். சாருலதா படத்தை இயக்கிய, பொன்குமரன் சொன்ன கதையை தான் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளார். 

பொன்குமரன் சொன்ன கதையை ரஜினியிடம், ரவிக்குமார் சொல்ல, ரஜினிக்கு அக்கதை மிகவும் பிடித்து போனதால் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஒருபக்கம் கோச்சடையான் பட ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வந்தாலும், ரவிக்குமார் இயக்கும் படத்திலும், மும்முரமாக கதை விவாதத்தில் மிக ஆர்வமாய் பங்கேற்று வருகிறார் ரஜினி. இதற்கிடையே இப்படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். 

இதனை கில்டு சங்கத்திலும் ரவிக்குமார் முறையாக பதிவு செய்துள்ளார். ரஜினி-ரவிக்குமார் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த படங்களை போன்று, இப்படமும் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது. 

ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். மே 2ம் தேதி முதல் மைசூரில், லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

லிங்கா பெயர், நடிகர் ரஜினிகாந்தின் பேரனும், தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகனின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 27, 2014

அந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்

அரசியல் வாரிசு நடித்து வரும் பிரண்டுடா படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்க பப்ளிமாஸ் நடிகையிடம் கேட்டாராம் வாரிசு. 

"உங்களோட எத்தனை படத்துல வேணாலும் கெஸ்ட்ரோல்ல சம்பளம் வாங்காமலே நடிச்சுத்தர்றேன். ஆனால் அவள் (ஒன்பதுதாரா) நடிக்கிற படத்துக்கு மட்டும் கூப்பிடாதீங்க சார்"னு அன்பா மறுத்துட்டாராம் பம்ளிமாஸ். 

உலக நாயகன் மகளிடம் கேட்க "நான் இப்போ ரொம்ப பிசி"ன்னு சொல்லிட்டராம். ஒத்துக்கிட்டிருக்கிறவர் லட்சுமிகரமான மேனன் நடிகை. காரணம் வாரிசு நடிகரின் அடுத்த பட ஜோடி அவர்தானாம்.

Saturday, April 26, 2014

போங்கடி நீங்களும் உங்க காதலும் - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரின் பட்டறையில் உதவி இயக்குநராக பட்டை தீட்டப்பட்டு, ''குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்'', 'கோரிப்பாளையம்', உள்ளிட்ட படங்களின் மூலம் எதிர்பாராத விதமாக கதாநாயகராக நடித்திருப்பதுடன் எழுதி, இயக்கவும் செய்திருக்கும் திரைப்படம் தான் ''போங்கடி நீங்களும் உங்க காதலும்!''

பக்கா லோக்கல் வழிப்பறி உதார் பேர்வழி ராமகிருஷ்ணனின் திருட்டுத்தனம் ஒன்றால் பாதிக்கப்படும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த ஆத்மியா, அந்த ஒரு காரணத்திற்காகவே ராம்கியை துரத்தி துரத்தி காதலித்து, பழிவாங்க துடிக்கிறார். 

பெண்களின் நெஞ்சாங்கூட்டிற்கு மேல் கிடக்கும் தங்கச்சங்கிலியை களவாடும் வழக்கமுடைய ராமகிருஷ்ணனுக்கு, ஆத்மியின் நெஞ்சமும், காதலும் புரியாத புதிராக இருக்கிறது. 

'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்...' என்பதற்கேற்ப ஒருக்கட்டத்தில் ராம்கி அதாங்க, ராமகிருஷ்ணனும் ஆத்மியை உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கும் தருணத்தில், ஹீரோவுக்கு ஆத்மியின் 'அகாசுகா' திட்டம் தெரிய வருகிறது. ஆனாலும், காதலுக்காக கசிந்துருகிறார் ராம்கி., அவரை சட்டை செய்ய மறுக்கிறார் ஆத்மியா. 

இந்நிலையில் செம 'டுவிட்ஸ்ட்'டாக ராம்கியின் திருட்டுத்தனத்தால், ஆத்மியாவுக்கு அன்று நல்லது தான் நடந்திருக்கிறது எனும் உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. சுற்றமும், நட்பும் இதை ஆத்மியாவிற்கு சொல்ல, அம்மணி ராம்கியை தேடி ஓடி வருகிறார். 

ராம்கி, 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' எனத் தெறித்து ஓடுகிறார். இதுதான் இப்படத்தின் காமெடி, களவாடி, காதலாகிய கருத்துள்ள கதை, களம் எல்லாம்!

நாயகராக ராமகிருஷ்ணன் டவுசர் தெரிய தூக்கிகட்டிய லுங்கியும், ராப்பரி வழிப்பறி என பக்கா லோக்கலாகும் முயற்சியில் ஆரம்ப காட்சிகளில் சற்றே ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில், ''டவுசர் தெரிய லுங்கி கட்டினா நாங்க லோக்கலு, ஜட்டி தெரிய பேண்ட் போட்டா அது பேஷனா...?'' என கேட்கும் இடங்களில் கவனிக்க வைக்கிறார். 

சகாபுள்ளி சென்ராயனுடன் அவர் அடிக்கும் லூட்டிகள் சற்றே ஓவர் என்றாலும் கதைக்கும், அந்த களத்திற்கும் அந்த கலாய்ப்புகள் நியாமாகவே படுகிறது. மொத்தத்தில் ராமகிருஷ்ணன் தனது முந்தைய படங்களைக்காட்டிலும் முத்தாய்ப்பாகவே நடித்திருக்கிறார். கீப் இட்அப்!

திவ்யாவாக வரும் ஆத்மியா, 'மனம் கொத்தி பறவை'யில் கவர்ந்த அளவிற்கு நம் மனம் கவரவில்லை என்றாலும், வில்லானிக் ஹீரோயினாக மிரட்டியிருக்கிறார் மிரட்டி!

காருண்யா, ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சென்ராயன், சாமிநாதன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது!

எம்.வி.பன்னீர் செல்வத்தின் எழில் கொஞ்சும் ஒளிப்பதிவு, கண்ணனின் காருண்ய இசை, 'காதலே காதலே...' என பின்னணியில் கதறிடும் தஞ்சை செல்வியின் நெஞ்சை அள்ளும் குரல் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளும், ''பேஸ்புக், டுவிட்டருன்னு உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் கொடுத்தா... அதமனசை சுருக்குற மட்டமான காரியத்துக்கு பயன்படுத்துறீங்களேடா...'' உள்ளிட்ட கரண்ட் டயலாக்குகளும், எம்.ஏ.ராமகிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் ஒரு சிலகுறைகள் இருந்தாலும், அவற்றை பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்தவிடாமல் தடுத்து விடுகின்றன!

ஆகமொத்தத்தில், ''போங்கடி நீங்களும் உங்க காதலும்'' - ''போங்க(டா) நீங்களும் உங்க திரைப்படமும்'' எனும் அளவில் இல்லாமல் இருப்பது ஆறுதல்!

Monday, April 21, 2014

ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது - சௌந்தர்யா கட்டளை

ரஜினி நடித்து, அதை மோஷன் கேப்சரிங் என்கிற நடிப்பு பதிவாக்கம் முறையில் கோச்சடையான் படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சில காட்சிகளில் மட்டுமே ரஜினி நடித்துள்ளார். 

99 சதவிகித காட்சிகளில் நடித்தது, ரஜினியைப் போல் மிமிக்ரி செய்யும் சின்னத்திரை நடிகர் ஒருவரும், யுவராஜ் என்ற டான்ஸரும் தான். 

ரஜினிக்கு பதில் டூப்புகள் பயன்படுத்தப்பட்ட இந்த விஷயங்களை படு ரகசியமாக வைத்திருந்தனர். 

இது பற்றிய தகவல் நமக்குக் கிடைத்ததும் கடந்த வாரம் அதை செய்தியாய் வெளியிட்டிருந்தோம். 

நாம் வெளியிட்ட செய்தியைக் கண்டதும் கோச்சடையான் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு கடும் அதிர்ச்சி. 

ரகசியமாக வைத்த தகவல் எப்படி வெளியே கசிந்தது என்று திகைத்துப்போனவர், கோச்சடையான் படத்தில் ரஜினிக்காக டூப்பாக நடித்த நடிகர்களை வரவழைத்து இது பற்றி விசாரித்திருக்கிறார். 

அது மட்டுமல்ல, ரஜினிக்கு டூப்பாக நடித்தது பற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று உத்தரவும் போட்டிருக்கிறார். 

அதோடு, கோச்சடையான் வெளியான பிறகு சக்சஸ் மீட் ஏற்பாடு செய்து அப்போது உங்களை எல்லாம் அழைத்து மீடியாக்கள் முன்னிலையில் கௌரவப்படுத்துகிறேன் என்றும் ஆசைவார்த்தைகளைச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

Sunday, April 20, 2014

சீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை

கொடுக்குற தெய்வம் கூரைய பொத்துக்கிட்டு கொடுக்கும்ங்றது மற்றவங்களுக்கு. வானத்தை பொத்துக்கிட்டு ஊத்தும்றது சீனா கானாவுக்கு. 

"தயவுசெய்து 8 கோடி சம்பளம் போதும்"னு அவர் கத்தினாலும் கதறினாலும் 10 கோடிதான் தருவோம்னு ஒத்தக் கால்ல நிக்குறாங்க தயாரிப்புங்க. 

இது ஒரு பக்கம்னா டாப் ஹீரோயின்கள்லாம் சீனா கானாவுக்கு தூதுவிட்டு உங்களோட அடுத்த படத்துல நான் நடிக்கிறேன்னு சொல்றாங்களாம். 

இவுங்க நம்ம ஆளுங்கன்னு சொல்ற படத்துல ஒன்பதுதாராவை நடிக்க வச்சிக்கிட்டிருக்குற பாண்டி நாட்டு மன்னன் டைரக்டர்கிட்ட "நீங்கதானே சீனா கானாவை அறிமுகப்படுத்தினீங்க அவரை வைத்து அடுத்து படம் எடுங்க அதுல நான் நடிக்கிறேன். 

நீங்க கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கிறேன்"னு சொன்னாராம் ஒன்பது தாரா. 

விஷயத்தை இயக்குனர் சீனா கானாகிட்ட சொல்ல அவரும் "எனக்கு ஓகே நீங்க ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க"ன்னு சொல்லிட்டாராம். 

சிட்டிலேயும், காட்டுலேயும் மழை இல்லேன்னாலும் சீனா கானா காட்டுல கொட்டுது போங்க.

Tuesday, April 15, 2014

மீண்டும் வெளிவரும் அஜீத்தின் அமர்க்களம்

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜீத்தின் 25-வது படமாக வெளிவந்த 'அமர்க்களம்' பாக்ஸ் ஆபீசில் பெரிய வரவேற்பைப் பெற்றது. 

சரணின் இயக்கத்திலும், பரத்வாஜின் இசையமைப்பிலும் வெளிவந்த இந்தப் படம் அஜீத்திற்கும் திரையுலகில் ஒரு திருப்புமுனையைத் தந்தது.

இதுநாள் வரை மென்மையான காதல் ஹீரோவாக காட்சி தந்த அஜீத்திற்கு இந்தப் படம் ஒரு வெகுஜன ஹீரோ தோற்றத்தை ஏற்படுத்தித் தந்தது. 

அது மட்டுமின்றி இந்தப் படத்தில் திரையில் தனக்கு ஜோடியாக வந்த ஷாலினியை நிஜ வாழ்விலும் பின்னர் அஜீத் கரம் பிடித்து தனது வாழ்க்கைத் துணையாக்கிக்கொண்டார்.

அப்போது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் படம் இப்போது டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட உள்ளது என்று திரைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புதிய காப்பி அவரது ரசிகர்களுக்கு சிறந்த கோடைக் கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Monday, April 14, 2014

ஏமாற்றிய ஹீரோ, கோபத்தில் ஹீரோயின்

என்னோட அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோயின்னு சொல்லித்தான் சிவமயமான ஹீரோ தன்னோட கவலைப்படாதோர் சங்கத்து படத்துல சின்ன சில்க் நடிகையை கெஸ்ட் ரோல்ல நடிக்க வச்சாராம். 

படம் எக்குதப்பா பிச்சுக்கிட்ட ஓட நடிகர், ஹீரோயினை சுத்தமா மறந்துட்டாராம். 

அதே படத்துல தனக்கு ஜோடியா நடிச்சவருக்கே சிபாரிசு பண்ணுறாராம். 

அதனால நடிகர் பேரைக் கேட்டாலே நடிகை நன்றிகெட்டவர்னு பொறிஞ்சு தள்ளுறாராம்.

Friday, April 11, 2014

ஐரோப்பிய நாடுகளில் படமான அர்ஜூனின், ஜெய்ஹிந்த்-2

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து, நடிக்கும் படம் ஜெய்ஹிந்த்-2. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .

இன்னொரு நடிகையாக சிம்ரன்கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். 

இவர்களுடன் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒரு நாடு வல்லரசு நாடாக மாறவேண்டுமானால் பணபலம், படைபலம் ஆகியவற்றை மீறின ஒரு விஷயம் என்னவாக இருக்கும் என்றால் கல்விதான். 

நல்ல அறிவாளிகள் இருந்தால் நாட்டை மேம்பட வளர செய்வார்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி ஜெய்ஹிந்த் - 2 படத்தை உருவாக்கி வருகிறோம். 

சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் நானும் கதாநாயகி சிம்ரன் கபூரும் பங்கேற்ற சேசிங் காட்சிகள் ஹைவே ரோட்டில் படமாக்கினோம் படு திரில்லிங்கான காட்சிகள் படமாக்கப்பட்டது. ஸ்டன்ட் கலைஞர்ககளுடன்.

சிங்கப்பூரில் “கார்டன் பை தி வே” என்ற இடத்தில் “இவன் யார்? இவன் நெருப்பானவன்” என்ற பாடல் காட்சியில் நானும் சிம்ரன்கபூரும் பங்கேற்க படமாக்கினோம். 

உலகத்தில் உள்ள எல்லா விதமான மரம், செடி, கொடிகள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்க்கிற இடம். இங்கு இதுவரை யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பதும் இந்த பாடலின் சிறப்பம்சம். 

படத்தின் 95 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தது .இன்னும் இரண்டு பாடல்காட்சிகள் தான் பாக்கி. விரைவில் படத்தை திரையிட உள்ளோம் என்கிறார் அர்ஜுன்.

Wednesday, April 9, 2014

கத்தி பட சர்ச்சை - தப்பித்த சூர்யா, மாட்டிக்கொண்ட விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கும் லைகா மொபைல் நிறுவனம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

இந்நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற தகவல் தினம்தினம் புதுப்புதுஆதாரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. 

இப்படி வெளியாகும் செய்திகளினால் செம டென்ஷனில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நெருக்கடி உருவாகி இருக்கிறது. இலங்கையின் மருமகன் என்று இலங்கைத் தமிழர்களால் கொண்டாட்டப்பட்ட விஜய் பணத்துக்காக லைகா மொபைல் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்தது உலகத்தமிழர்களை கடும் கோபத்துக்குள்ளாக்கி உள்ளது.

கத்தி படம் தொடர்பாகவும், லைகா மொபைல் நிறுவனம் தொடர்பாகவும் ஏற்பட்ட தற்போதைய சர்ச்சைகளைக் கண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு முன்னணி ஹீரோ. அவர்..சூர்யா.

லைகா மொபைல் நிறுவனம் முதன்முதலில் அணுகியதே சூர்யாவைத்தான். அவர் வாங்கும் சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் தருவதாக ஆசைக்காட்டி கால்ஷீட் கேட்டிருக்கிறது. 

எந்தவொரு நிறுவனத்துக்கும் கால்ஷீட் கொடுப்பதற்கு முன் அந்த நிறுவனத்தின் பின்னணியை விசாரித்து, அதன் பிறகே முடிவு செய்வாராம் சூர்யா. 

அதன்படி லைகா மொபைல் பற்றி விசாரித்தபோது, அந்நிறுவனம் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற விவரம் தெரிய வர, லைகா நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டாராம். 

சூர்யா மறுத்த பிறகே விஜய்யைத் தேடிப்போய் புக் பண்ணி இருக்கின்றனர். இதை எல்லாம் எண்ணியபடி, கத்தி படம் தொடர்பாக நடக்கும் பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறாராம் சூர்யா.

Tuesday, April 8, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

கிட்டத்தட்ட 50 கோடிக்கு பிஸினஸ் ஆகியிருக்கும் சிவகார்த்திகேயனின் திரைப்படம், ஏ.ஆர்.முருகதாஸின் கதை, அனிருத்தின் இசை, சிவகார்த்திக்கு ஹன்சிகா மோத்வானி ஜோடியான படம், ஏ.ஆர்.முருகதாஸ் புரடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான் மான் கராத்தே! 

இத்தனை பில்-டப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் இப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா? எனக் கேட்டால்., சண்டை போடாமல் சண்டையில் இருந்து தப்பிக்கும் உத்திதான் மான் கராத்தே எனும் பெயர் காரணம் என இப்படக்குழு சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது. 

கதையே இல்லாமல் அதை படமாகவும், எடுக்காமல், படம் எடுத்தது மாதிரி பாவ்லா பண்ணியிருக்கிறார்கள்... மான்கராத்தே குழுவினர் என்பது தான் இப்படத்தின் பலம்(?) பலவீனம்(!) இரண்டும்!!

ஒரு ஷாப்பிங் மாலில் நாயகி ஹன்சிகா மோத்வானி, இரண்டு கையிலும் ஆசை ஆசையாய் கோன் ஐஸை வாங்கிக் கொண்டு, ஷூ லேஸ் கழண்றதால் அதை எதிர்படும் சிவகார்த்தியிடம் கொடுத்து வைத்துக் கொள்ள சொல்லிவிட்டு லேஸை கட்டுகிறார். 

அதற்குள் சிவகார்த்தி ஒரு கோனை சற்றே நக்கி சுவைக்க, அதில் கடுப்பாகும் ஹன்சிகா, இரண்டு கோன்களையும் புதிதாக வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிக்கிறார். சிவகார்த்தி, இருபது ரூபாய் காசில்லாததால் வாங்கித்தர மறுக்கிறார். 

இதில் சிவகார்த்தி மீது செம கடுப்பாகி கிளம்பி போகிறார் ஹன்சிகா. இவர்களது அடுத்த சந்திப்பும் அதே மாதிரி ஒரு மாலில் உள்ள லிப்டில், யாரோ ஒரு தடியன் போட்டுச் சென்ற கார்பன்-டை-ஆக்சைடு வெடிகுண்டினை, சிவகார்த்தி தான் ரிலீஸ் செய்ததாக கருதி, அவர் மீது ஹன்சிகா கடுப்பாகும் காட்சியில் தொடர்கிறது. இந்த இரண்டு சந்திப்புகளுக்கு பின் சிவகார்த்திக்கு, ஹன்சிகா மீது காதலோ காதல் அப்படி ஒரு காதல்!

கையில் இருபது ரூபாய் கூட இல்லாமல் அடுத்தவர் ஐஸ்கிரீமை நக்கும் ரகமான ராயபுரம் பீட்டர் எனும் சிவகார்த்தி மீது, அவர் வழக்கமான ஹீரோக்கள் செய்வது மாதிரி செய்யும் நாயகியின் வண்டி பஞ்சர் ஆன போது செய்யும் ஹெல்ப் உள்ளிட்ட இத்யாதி, இத்யாதி விஷயங்களுக்காக ஹன்சிகாவுக்கும், சிவகார்த்தி மீது காதல் வருகிறது.

வேலைவெட்டி இல்லாத சிவகார்த்தி, ஹன்சிகாவுக்காக நிறைய மாறுகிறார். கூடவே பெரிய குத்துச் சண்டை வீரராகவும் உருமாறுகிறார். அது எப்படி? ஏன்? எதற்கு.? என்பது தான் மான் கராத்தே காமெடியும், காதில் பூச்சுற்றலுமான மீதிக்கதை!

சென்னை, ராயபுரம் பீட்டராக சிவகார்த்தி, இன்னும் நிறைய பீட்டர் விட்டு, ஹன்சிகாவை கவுத்தி இருக்கலாம். அதை விடுத்து பாக்ஸர், அதுவும் மான் கராத்தே பாக்ஸர், அடி, உதை என ஆக்ஷ்னில் இறங்காமல் இறங்கி ரசிகர்களை கொல்லாமல் கொல்வது சற்றே உறுத்தல். 

பாக்ஸிங்கே தெரியாமல் பைனல் போட்டி வரை சிவகார்த்தி வந்துவிட்டு, பைனலில் கில்லர் பீட்டருடன் மோத பயப்பட்டு காதலிக்காக இந்த போட்டியில் விட்டுத்தர சொல்லி கெஞ்சுவதும், அவர், இவரது ஹன்சிகாவை விட்டுத்தரச் சொல்லி மிஞ்சுவதும் கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர்!

சிவகார்த்தியை நல்லவராக காட்ட வேண்டும் என்பதற்காக கில்லர்-பீட்டர் வம்சியை கெட்டவனாக காட்டியிருப்பது கொடுமை! ஆக்ஷ்ன் காட்சிகளில் சிவகார்த்தி அப்படி இப்படி இருந்தாலும் பிரண்ட்ஸ் சென்டிமெண்ட், ஹன்சிகாவுடனான ரொமான்ஸ் உள்ளிட்ட விஷயங்களிலும், டான்ஸிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனிதர். 

அதேநேரம் 40 பவுண்சர்களை (என்னதான் புரடியூசர் செலவு என்றாலும்...) விழா வேத்திகளுக்கு அழைத்து வருவதை விடுத்து சிவகார்த்தி, நல்லதாய் 4-5 கதை கேட்பாளர்களை தன் கூட வைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது!

ஹன்சிகா வழக்கம் போலவே செமக்யூட், அவருக்கு சிவகார்த்தி மீது காதல் வருவதற்கான காரணங்கள் தான் புரியாத புதிர். காமெடி சதீஷ் அண்ட் கோவினர் சத்யம் கம்ப்யூட்டரில் வேலைபார்த்து கம்பெனி திவாலானாதும், ஒரு சித்தரின் ஜோசியம், ஹோசியத்தை நம்பி சிவகார்த்தியை பாக்ஸர் ஆக்க முயற்சிப்பதும், பின் பேக் அடிப்பதும் நம்பமுடியாத காமெடி!

மான் கராத்தேயின் பெரிய பலம் அனிருத்தின் இசையும், அழகிய பாடல்களும்தான். அதேமாதிரி எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் பெரும்பலம். இவை இரண்டுக்காவும் மான் கராத்தேவை பார்க்கலாம், ரசிக்கலாம்!

ஏ.ஆர்.முருகதாஸின் கதை எனப் போட்டுவிட்டு எந்த கதையும்ல, எள் அளவும் இல்லாமல் இருப்பது, கே.திருக்குமரனின் திரைக்கதை, இயக்கத்தில் த்ரிலிங்காக எதுவும் இல்லாமல் இருப்பது உள்ளிட் மைனஸ் பாயிண்ட்டுகளுடன், பத்து திருக்குறள் தெரியாத ஹீரோ, கரியமில வாய்வு காமெடி ரசனை என மான் கராத்தே பெரிதாய் மனதை கவரலை! ஆனாலும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை... என சொன்னதற்காக மான் கராத்தே - மனதை கவருதே!

Monday, April 7, 2014

விஜய் படத்தில் ஹாலிவுட்டுக்கு இணையான செட்!



கடந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததால் பெரிய பரபரப்பு நிலவியது. 

அதனால், அடுத்தபடியாக அவர்கள் ஒரே நேரத்தில் நடிக்கும் படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அதையடுத்து விஜய்யின் கத்தி படப்பிடிப்பு உடனடியாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில, கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படபிடிப்பு வருகிற 9-ந்தேதிதான் நடைபெறுகிறது.

அதனால் இந்த முறை விஜய்-அஜீத் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக, வருகிற தீபாவளிக்கு விஜய் மட்டும் களத்தில் குதிப்பார் என்று தெரிகிறது. 

ஆனால், துப்பாக்கி கொடுத்த திருப்தியை தலைவா, ஜில்லா படங்கள் விஜய் ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை என்பதால், கத்தியை முழுதிருப்தியான படமாக கொடுத்து விட முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார் விஜய்.

அதோடு, இந்த படத்தில் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதன்காரணமாக, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சியை படமாக்க தற்போது ரூ. 1 கோடி மதிப்பில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

இந்த செட் இதுவரை விஜய் படங்களில் இல்லாத வகையில் ஹாலிவுட் படங்களில் பயன்படுத்துப்படும் செட்களுக்கு இணையாக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

Saturday, April 5, 2014

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - சினிமா விமர்சனம்

வம்சம்', 'மெளன குரு', 'தகராறு' ஆகிய படங்களைத் தொடர்ந்து அருள்நிதி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மற்றும் அருள்நிதியின் தந்தை மு.க.தமிழரசு தயாரிப்பில், மோகனா மூவிஸ் பேனரில், ஜெ.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் ஜெ.சதீஷ்குமார் வழங்கிட வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'

ஒருவன் குறித்த நேரத்தில் ஒரு வேலையை ஆரம்பித்தால் அது ஒரு விதமாகவும், 2நிமிடம் தள்ளி ஆரம்பித்தால் அது இன்னொரு விதமாகவும், இன்னும் சில நிமிடங்கள் கழித்து ஆரம்பித்தால் அது மேலும் சில மாற்றங்களுடனும் நடந்தேறும் என்பதை காமெடியாகவும், கலைரசனையுடனும் தனக்கே உரிய பாணியில், ஒரே கதையை மூன்று விதமாக காட்சிப்படுத்தி வென்றிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

அருள்நிதியின் காதலிக்கு திருவான்மியூர் சர்ச்சில் வேறொருவருடன் திருமணம் நடக்க இருக்கிறது. அதை தடுத்து நிறுத்த விரும்பும் அருள்நிதிக்கு, அம்மணியை கடத்த சொல்லி 30 லட்சம் பணமும் தர சம்மதிக்கிறார் காதலியின் தந்தை ரவிராகவேந்தரின் தொழில்போட்டியாளர் நாசர்! 

கரும்பு தின்னகூலியா.?! எனக் கேட்காமல் தன் தோழன் பகவதி பெருமாள் எனும் பக்ஸ், தோழி பிந்து மாதவி உள்ளிட்டோருடன் காதலி கம் மணப்பெண்ணை கடத்த கிளம்பும் அருள்நிதி, எதிர்கொள்ளும் சோதனைகளும், சாதனைகளும் தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'.

இந்தகதையை சிவபெருமான் - நாரதர் உள்ளிட்டோர் பங்குபெற மூன்று விதமாக போரடிக்காமல் இயக்கி இருப்பதும், சிம்புதேவனுக்கு அதில் அருள்நிதி, பிந்துமாதவி, 'பக்ஸ்' பகவதி பெருமாள், சிஸர், கிரேன் மனோகர்கள், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டு உள்ளிட்டோர் பக்கபலமாக இருந்து இருப்பது தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்தின் பெரும்பலம்!

அருள்நிதியின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அம்மா சென்டிமெண்ட், காதலி கடத்தல் எல்லாமே சூப்பர்ப்! பிந்து மாதவியின் நடிப்பும், துடிப்பும் ஓ.கே. மற்றொரு நாயகி ஹர்சிதா ஷெட்டி நடிப்பும் கூட டபுள் ஓ.கே. 

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு, நடராஜன் சங்கரனின் இசை, வைரமுத்துவின் வரிகள், ராஜா முகமதுவின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சிம்புதேவனின் இயக்கத்தில், கதை சொன்ன விதத்தில் சற்றே ''12பி'' பட சாயல் தெரிந்தாலும், ''ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - ஒரு டிக்கெட்டில் 3 காமெடி படம் பார்த்த திருப்தி!''

Thursday, April 3, 2014

தமிழகத்தில் 345 தியேட்டர்களில் வெளியாகும் மான் கராத்தே

சிவகார்த்திகேயன்-ஹன்சிகா மொத்வானி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மான் கராத்தே’. புதுமுக இயக்குனர் திருக்குமரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

எஸ்கேப் ஆர்ட்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 

வருகிற ஏப்.4-ந் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படம் முன்னணி நடிகர்களுக்கு போட்டி போடும் வகையில் விற்பனையாகியுள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 345 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம். 

மேலும் வெளிநாட்டில் 180, கர்நாடகா 60, கேரளா 55, வட இந்தியாவில் 35 என மொத்தமாக 675 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 2 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடுகின்றனர். 

தியேட்டர் உரிமைக்காக மட்டும் இதுவரை 28 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. மேலும், விஜய் டிவிக்கு வழங்கிய சேட்டிலைட் உரிமம் 9 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை ரூ. 5 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது. ஆக மொத்தம் இப்படம் ரூ.42 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. 

குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Wednesday, April 2, 2014

விஜய்யின் அடுத்த படம் யாருக்கு?

இப்போதெல்லாம் ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்து யாருடைய படத்தில் நடிப்பது என்கிற விசயத்தில் ரொம்பவே தடுமாறிப்போகிறார்கள் பிரபல ஹீரோக்கள். 

அந்த வகையில், ஐ படத்தை முடித்த விக்ரமிடம் பல இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள் என்றாலும், யார் படத்தில் முதலில் நடிப்பது என்பதை இன்னமும் அவர் முடிவெடுக்கவில்லையாம்.

அதேபோல்தான் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய்யும், அடுத்த படம் குறித்து இன்னும முடிவெடுக்காமல் இருக்கிறாராம். 

விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக டைரக்டர்கள் சமுத்திரகனி, அட்லி இருவருமே வெளிப்படையாக கூறி வருகின்றனர். 

ஆனபோதும், அதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து எந்தவித ரெஸ்பான்சும் வரவில்லையாம்.

ஆனால் இதுபற்றி விஜய் வட்டாரத்தை விசாரித்தால், அடுத்து விஜய்யை இயக்க பல டைரக்டர்கள் கதை சொல்லியிருப்பது உண்மைதான். 

ஆனால், அவருக்கு அந்த கதைகள் பிடித்திருந்தாலும் அப்படங்களில் உடனடியாக நடிக்கும் முடிவில் இல்லை. 

அவர் மனதில் வேறு சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படத்தில்தான் அடுத்து பணியாற்ற ஆசைப்படுகிறார். 

அதனால் கத்தி முடிந்த பிறகுதான் அதுபற்றிய பேச்சுவார்த்தையை விஜய் தொடங்குவார் என்கிறார்கள்.

Tuesday, April 1, 2014

600 தியேட்டர்களில் மான்கராத்தே ரிலீஸ்



சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே சூப்பர் ஸ்டாரின் பட ரேன்ஞ்சுக்கு எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கிறது. 

காரணம் சிவகார்த்திகேயனின் தொடர் வெற்றி, ஹன்சிகாவின் காதல் பிரேக்அப்பிற்கு பிறகு வெளிவரும் படம். ஏ.ஆர்.முருதாசின் கதை. எப்படியும் காமெடிக்கு கியாரண்டி இருக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. 

படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டை விட படம் நான்கு மடங்கு அதிக தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 4ந் தேதி படம் ரிலீசாகிறது.

தமிழ்நாடு முழுவதும் 350 முதல் 400 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. சென்னை நகரில் மட்டும் 30 தியேட்டர்களில் ரிலீசாகிறது. உலக நாடுகளில் 160 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. 

தென்னிந்திய மாநிலங்களையும் சேர்த்தால் மொத்தம் சுமார் 600 தியேட்டர்களில் ரிலீசாகிறது. 

வளர்ந்து வரும் ஒரு புதுமுக நடிகரின் படம் இத்தனை அதிகமான தியேட்டர்களில் ரிலீசாவது இதுவே முதன் முறை என்கிறார்கள். 

ரிலீசுக்கு பிறகு கூடுதல் பிரிண்டுகள் தேவைப்பட்டால் அதற்கும் தயாராகவே இருக்கிறார்களாம்.